காரைக்குடி மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு; 10 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை இதுதான்!

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; உதவியாளர் பணியிடங்கள்; 10 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; உதவியாளர் பணியிடங்கள்; 10 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
Ambikapathi Karuppaiah
New Update
csir

தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர், முதுநிலை திட்ட உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 10 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Advertisment

Senior Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Ph.D. in Chemistry/ Physics / Material Science/ M.Sc. in Chemistry/ Physics/ Material Science படித்திருக்க வேண்டும். மேலும் 2-3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 42,000 + HRA

Project Associate – II

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: M.Sc. in Chemistry படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 28,000 + HRA

Project Associate – I

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: M.Sc. in Biotechnology/ Genomic Science/ Microbiology (or) B.Tech. in Metallurgical & Materials Engineering/ M.Sc. in Chemistry/ M.Sc. in Physics படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 25,000 - 31,000 + HRA

Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Diploma in Mechanical Engineering அல்லது B.Sc. in Chemistry படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 20,000 + HRA

வயது தளர்வு: அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் 06.10.2025 அன்று நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்: Director, CSIR-CECRI, Karaikudi

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Central Government Jobs Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: