சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 500க்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - 76
டைப்பிஸ்ட் - 229
உதவியாளர் - 119
வாசிப்பாளர்/ஆய்வாளர் - 142
ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 07
முக்கிய தேதிகள்
ஜூலை 1ம் தேதி முதல் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க துவங்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : ஜூலை 31, 2019
தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் : ஆகஸ்ட் 2, 2019
கல்வித்தகுதி
இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சமாக ஏதேனும் ஓர் துறையில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வாசிப்பாளர் மற்றும் ஆய்வாளர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு கணினி தொடர்பான சான்றிதழ் படிப்பு அவசியம்.
கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட் பணிகளுக்குத் டைப்ரைட்டிங் படிப்பு சான்றிதழ் கட்டாயம்.
வயதுவரம்பு (ஜூலை 1, 2019 தேதியின்படி)
பொது பிரிவினர் - 18 வயது முதல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் - 18 வயது முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம்
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் - ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
டைப்பிஸ்ட் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
உதவியாளர் - ரூ.20,000 முதல் ரூ.63,600 வரை
வாசிப்பாளர்/ஆய்வாளர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
ஜெராக்ஸ் ஆபரேட்டர் - ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப் பிரிவினருக்கு ரூ.300
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக் கட்டணம் கிடையாது.
தேர்வு முறை :
முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும். பின், திறன் அறியும் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த பணியிடங்கள், தேர்வுகள், விண்ணப்ப கட்டணம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login இணையதளத்தை பார்க்க தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.