Advertisment

வெளிநாட்டு மருத்துவ படிப்பு; கோவை வழிகாட்டி முகாமில் மாணவர்கள் திரளாக பங்கேற்பு

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது; கிர்கிஸ்தான் மருத்துவ கல்லூரிகள்

author-image
WebDesk
New Update
Kovai Medical admission

வெளிநாட்டு மருத்துவ படிப்பு; கோவை வழிகாட்டி முகாமில் மாணவர்கள் திரளாக பங்கேற்பு

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயில விரும்பும் தமிழக மாணவர்களுக்கென கோவையில் பிரத்யேக மருத்துவக் கல்வி கண்காட்சி நடைபெற்றது.

Advertisment

வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயில வழிகாட்டுவதற்கு என தனித்துவத்தோடு கோவையை தலைமையிடமாக கொண்டு சாலோம் டிரஸ்ட் செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழக மாணவர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை என பல்வேறு இடங்களில் நேரடியான கிளைகளுடன் மாணவ, மாணவிகளுக்கு 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் சென்று மருத்துவக் கல்வி பயில்வதற்கான சரியான கல்வி ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், தனது 14 ஆண்டு கால சேவையில் வெளிநாடுகளில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவராகும் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளது.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் 500 எம்.பி.பி.எஸ் சீட்களுக்கு ஆபத்து நீங்கியது: 2 கல்லூரிகளுக்கு மருத்துவ கவுன்சில் மீண்டும் அனுமதி

இந்நிலையில் சாலோம் டிரஸ்ட் எஜுகேஷன் சார்பாக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் வெளிநாட்டில் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் குறித்த கல்வி கண்காட்சி நடைபெற்றது. இதில் இந்தியாவிற்கு மிக அருகிலுள்ள கிர்கிஸ்தான் குடியரசு நாட்டிலுள்ள (JALAL-ABAD) ஜலால் அபாத் போன்ற அரசு மருத்துவ பல்கலை கழகங்கள் உட்பட பல்வேறு மருத்துவ கல்லூரிகளின் சார்பாக துணை முதல்வர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் வெளிநாட்டு பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் நேரடியாக கலந்துரையாடி கல்லூரிகளை பற்றிய விரிவான விளக்கங்களை பெற்று கொண்டனர்

publive-image

முன்னதாக சாலோம் டிரஸ்ட் நிறுவனர் அனிதா காமராஜ் மற்றும் வெளிநாட்டு பல்கலைகழக பிரதிநிதிகள் கென்சி குலோவ் குபனிச்பெக், அலீவா சைனாரா, தீபக் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். இதில் கிர்கிஸ் குடியரசு நாட்டில் செயல்படும் அரசு மற்றும் தனியார்  பல்கலை கழகத்தில் ஏராளமான இந்திய மாணவர்கள் தற்போது மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.

எங்கள் கல்லூரியில் இந்திய மாணவர்களுக்கு என்று FMGE பயிற்சி முதலாம் ஆண்டு முதலே கல்லூரி சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி. தென்னிந்திய உணவு என மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வியை வழங்குகிறோம். கடந்த கல்வி ஆண்டில் "FMGE" தேர்வு எழுதிய மாணவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் தனியாக எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் முயற்சியில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ்நாட்டை சார்ந்த மாணவி அஞ்சலிக்கு கல்லூரி சார்பாக ரூ. 10000 அமெரிக்க டாலர்கள் கல்வி உதவி தொகையாக வழங்கி உள்ளோம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஸ்காலர்ஷிப் தேர்வும் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

கண்காட்சி துவக்க விழாவில், கண்காட்சியில் கலந்து கொண்டு உடனடியாக அட்மிஷன் செய்த மாணவர்களுக்கு இலவச டேப்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சாலோம் டிரஸ்ட் சார்பாக நாமக்கல்லை சார்ந்த அரசுப்பள்ளி மாணவி மைதிலி பிரியாவுக்கு, கிர்கிஸ்தானில் மருத்துவம் பயில்வதற்கான அட்மிஷன், விசா, டாக்குமென்டேஷன் அனைத்தையும் இலவசமாக வழங்குவதற்கான உறுதிமொழி கடிதம் வழங்கப்பட்டது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment