Advertisment

67% கல்விக்கடன் பொதுப் பிரிவு மாணவர்களுக்கே - அரசு தகவல்

author-image
salan raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Top up education loans

Top up education loans

மதுரை மக்களவை உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் அவர்களின் கல்விக் கடன் குறித்த கேள்விக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சார்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

அந்த அறிக்கையில், எந்த பிரிவு மாணவர்களுக்கு கல்விக் கடன் அதிகமாக வழங்கப்பட்டது போன்ற தகவல்களும் இருந்தன.

publive-image       publive-image

கடந்த மூன்று வருடங்களாக கொடுக்கப்பட்ட மொத்த கல்விக்கடனில் (4.1 லட்சம் ), 2.75  கல்விக்கடன் பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 67%. 94,000 க்கும் அதிகமான கல்வி கடன்கள் ( அதாவது மொத்தத்தில் 23% ) ஒபிசி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் , 7% கல்விக் கடன்கள்  பட்டியல் பிரிவு மாணவர்களுக்கும், 3% கல்விக்கடன்கள் பட்டியல் பிரிவு பழங்குடி மக்களுக்கும் கிடைத்துள்ளது.

எண்ணிக்கையைத் தாண்டி, ரூபாய் மதிப்பில்லும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு  அதிகமாக கல்விக்கடன் சென்றடைந்துள்ளது . மொத்தம் விநியோகிக்கப்பட்ட 13,797.26 கோடியில், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் 9,730 கோடி சென்றுள்ளது. ஓபிசி/எஸ்சி/எஸ்டி போன்ற மாணவர்களுக்கு முறையே 2,750, 926 ,391 கோடிகள் ஆகும்.

இது குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் ieதமிழ் நாளிதழிடம் தெரிவிக்கையில்,"இன்னும் பட்டியல் பிரிவு மாணவர்களுக்கு உயரக்கல்வி எளிதாக அமையவில்லை என்பதையே இந்த தரவு காட்டுகின்றது. நாடாளுமன்றமும், அரசு இயந்திரமும் கார்ப்பரேட் வரி சலுகை என்ற ஒற்றை வாரத்தையில் எல்லா சமூக மாற்றங்களையும் தேடிக் கொண்டிருக்கின்றன" என்றார்.

மேலும், கல்வியைக் கடனாகக்கூட பின்தங்கிய மாணவர்களுக்கு கொடுக்க முடியாத சமூக  கட்டமைப்பில் இருக்கின்றோம். அரசு தான் இதற்கு பதில் கூற வேண்டும், இது குறித்து தொடர்ந்து பாராளுமன்றத்தில் மீண்டும் குரல் எழுப்புவேன் என்றும் எஸ்.வெங்கடேசன் தெரிவித்தார்.

 

சிறு குறிப்பு : மத்திய அரசின் கல்வி உத்தரவாத கடன் திட்டத்தின் மூலம், இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடனும் , வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

படிக்கும் திறனுள்ள மாணவர்கள், வறுமையால் தங்கள்  உயர்க்கல்வியை நிறுத்தாமல் இருக்கும் நோக்கத்திற்காக  இந்த திட்டம் துவங்கப்பட்டது.

Union Hrd Ministry Hrd Ministry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment