Advertisment

நீட் தேர்வில் சுமாரான மார்க்: அப்போ இந்த கல்லூரிகளை குறி வையுங்க!

நீட் தேர்வில் கம்மி மார்க் இருந்தாலும் எம்.பி.பி.எஸ் படிக்கலாம்; இந்த கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS

மருத்துவ படிப்பு

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் எம்.பி.பி.எஸ் படிக்கலாம். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ் படிக்க நீட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். அதேநேரம் 1 லட்சம் இடங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே இடங்கள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: NEET Counseling: தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இருப்பினும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரலாம். குறிப்பிட்ட சில கல்லூரிகளில் அகில இந்திய அளவில் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான தரவரிசை பெற்றவர்களுக்கு சீட் கிடைத்துள்ளது. அந்த கல்லூரிகளை தேர்வு செய்யும் பட்சத்தில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் தங்கள் எம்.பி.பி.எஸ் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

கல்லூரியின் பெயர் தரவரிசை நிலை
ராஜ ராஜேஸ்வரி மருத்துவ கல்லூரி, பெங்களூரு 1 - 1.9 லட்சம்
பாரதி வித்யபீடம் சுயநிதி பல்கலைக்கழகம், புனே 1 – 1.91 லட்சம்
எம்.ஜி.எம் மருத்துவ கல்லூரி, நவி மும்பை 1 – 1.95 லட்சம்
ஜெ.எல்.என் மருத்துவ கல்லூரி, வர்தா 1 – 1.96 லட்சம்
எஸ்.பி.கே.எஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுமன் தீப் வித்யா பீடம் 1 – 2.5 லட்சம்
எம்.எம். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் 1 – 1.15 லட்சம்
ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி சென்னை 1.01 – 4.11 லட்சம்
எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி சென்னை 1.2 – 3.01 லட்சம்
வி.எம்.கே.வி மருத்துவ கல்லூரி சேலம் 1.03 – 3.41 லட்சம்
பி.எல்.டி.இ சுயநிதி பல்கலைகழகம் பிஜப்பூர் 1.04 – 1.45 லட்சம்
டாக்டர் டி.ஒய் பாட்டீல் மருத்துவ கல்லூரி புனே 1.03 – 2.83 லட்சம்
ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி சென்னை 1.13 – 4.34 லட்சம்
கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனம் கரட் 1 – 2.97 லட்சம்
எஸ்.யூ.எஸ் மருத்துவ அறிவியல் நிறுவனம் புவனேஷ்வர் 1 – 1.49 லட்சம்
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சென்னை 1 – 1.66 லட்சம்
யெனெபோயா மருத்துவ கல்லூரி மங்களூர் 1.01 – 1.35 லட்சம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment