Advertisment

NEET Counselling: கம்மியா மார்க் எடுத்தாலும் எம்.பி.பி.எஸ் சீட்; இதை தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட் ஆஃப் விவரங்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mbbs students

mbbs students

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், எந்தக் கல்லூரியில் எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழ்நாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஜூலை 10 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்: NEET Counselling: டாப் மருத்துவக் கல்லூரிகள் எவை? கர்நாடகாவில் அட்மிஷன் நடைமுறை எப்படி?

இந்தநிலையில், எந்தக் கல்லூரியில் எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதில், மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களுக்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் சென்னை கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியும் அடங்கும். இதுதவிர 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

உங்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் என்றால், அதனையே தேர்வு செய்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் மற்றொரு தமிழ்நாடு மாணவருக்கு இடம் கிடைக்கும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில இடங்கள் என இரண்டுக்கும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் பட்சத்தில் அதனை தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு கட் ஆஃப் – பொதுப் பிரிவு

கல்லூரியின் பெயர் ஆரம்ப கட் ஆஃப் முடிவு கட் ஆஃப்
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை 60 797
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை 845 1778
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை 1123 2802
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் 711 4468
எய்ம்ஸ் மதுரை 3181 4737
வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர் 2249 4793
மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை 2316 5004
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை 3367 5015
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் 3836 7391
இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை 5558 7581
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு 5816 7838
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் 7758 8235
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி 1023 8299
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர் 6802 8574
தேனி மருத்துவக் கல்லூரி, தேனி 8077 9785
கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி 5378 10140
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி 6136 10842
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி 1706 11178
தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி 8488 11257
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் 11069 11648
அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் 7479 12024
திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் 11549 12094
அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு 11545 12303
கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம் 8874 12698
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை 10717 12755
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை 8020 14010
அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் 11301 14467
சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை 11351 14471
அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி 7952 14666
கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர் 13457 14726
அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் 8047 15591
அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் 13936 15686
அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் 13404 15972
அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் 7585 16601
அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி 13970 16605
அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி 12830 16732
அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் 14013 16771
அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் 13966 16897

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு கட் ஆஃப் – ஓ.பி.சி

கல்லூரியின் பெயர் ஆரம்ப கட் ஆஃப் முடிவு கட் ஆஃப்
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை 806 1294
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை 1852 3192
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை 3149 4021
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் 4697 5709
எய்ம்ஸ் மதுரை 4853 5866
மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை 5099 7022
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை 5430 7242
வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர் 6438 7729
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் 7429 8925
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு 8008 9295
இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை 9321 10108
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் 9044 10716
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி 9567 10799
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர் 9414 10872
கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி 11237 11511
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி 11146 12122
தேனி மருத்துவக் கல்லூரி, தேனி 11437 12211
தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி 11376 13415
அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு 13149 13455
திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் 12681 13675
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் 13284 13691
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி 11371 14288
கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம் 13110 14403
அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் 13572 14947
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை 14170 15204
சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை 14932 15328
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை 14109 15380
கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர் 14771 15562
அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் 14969 15839
அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி 14696 16737
அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் 15871 16819
அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் 16073 17017
அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் 15890 17102
அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் 16904 17137
அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் 16937 17288
அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி 17120 17312
அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் 17183 17446
அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி 16922 17453

இதேபோல், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான கட் ஆஃப் விவரங்களையும் கீழே உள்ள காணொலி மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment