Advertisment

MBBS Expected Cut Off: பி.சி பிரிவு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப்; கல்லூரி வாரியாக விவரம் இங்கே

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.சி பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் எவ்வளவு? முழு விவரம் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Counselling

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பி.சி பிரிவினருக்கான கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைகான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் பி.சி பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் இருக்கும் என கிளாசிக் நீட் அகாடமி யூடியூப் சேனலில் டாக்டர் பெரியசாமி முழுமையாக விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: NEET 2023 Cut Off: தமிழக டாப் ரேங்க் மாணவர்கள் அகில இந்திய கோட்டாவை தேர்வு செய்வார்களா?

அந்த வீடியோவில், தமிழ்நாடு மருத்துவ சேர்க்கை வாரியம் வெளியிட்டுள்ள சீட் மேட்ரிக்ஸ் படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.சி பிரிவினருக்கு 1078 இடங்கள் உள்ளன. இதனால் பி.சி பிரிவினருக்கு கட் ஆஃப் 561 ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சிலர் சென்றால், கட் ஆஃப் 555 ஆக குறைய வாய்ப்புள்ளது.

பி.சி பிரிவுக்கு கல்லூரி வாரியான கட் ஆஃப் விவரம்

1)    மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை - 656

2)    ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 644

3)    கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 634

4)    கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 625

5)    மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 621

6)    ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை - 621

7)    செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 613

8)    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் – 612

9)    அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர் - 607

10)   அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 607

11)   கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி – 604

12)   திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 600

13)   வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர் – 597

14)   அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு – 595

15)   தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 593

16)   தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி – 591

17)   இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை - 590

18)   விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 589

19)   தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 582

20)   கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர் – 580

21)   கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி - 580

22)   திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை – 580

23)   அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் - 577

24)   கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம் - 573

25)   அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் - 573

26)   திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் – 572

27)   புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை – 572

28)   சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 570

29)   அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி - 566

30)   அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் - 566

31)   அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் - 565

32)   அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் - 562

33)   அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி - 560

34)   அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் - 560

35)   அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் - 558

36)   அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் - 556

37)   அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி - 555

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment