Advertisment

NEET Counselling: தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்; பி.சி, எம்.பி.சி கல்லூரி வாரியான கட் ஆஃப் இதோ!

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.சி மற்றும் எம்.பி.சி மாணவர்களுக்கான கட் ஆஃப் விவரங்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mbbs students

mbbs students

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பி.சி மற்றும் எம்.பி.சி மாணவர்களுக்கு எந்த அரசுக் கல்லூரியில் எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழ்நாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் சென்னை கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியும் அடங்கும்.

இதையும் படியுங்கள்: NEET Counselling 2023: அகில இந்திய ஒதுக்கீடு நீட் கவுன்சிலிங்; தேவையான ஆவணங்கள், செயல்முறை என்ன?

இந்தநிலையில், பி.சி மற்றும் எம்.பி.சி மாணவர்களுக்கு எந்த அரசுக் கல்லூரியில் எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட் ஆஃப்

கல்லூரியின் பெயர் BC MBC
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை 656 647
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை 644 632
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை 634 627
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் 624 615
மதுரை மருத்துவக் கல்லூரி, 621 609
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை 620 607
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு 613 599
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் 612 600
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர் 607 595
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் 606 595
கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி 604 591
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி 600 581
வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர் 597 584
அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு 594 576
தேனி மருத்துவக் கல்லூரி, தேனி 592 574
தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி 591 575
இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை 590 574
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் 588 574
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி 581 560
கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர் 580 559
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி 579 554
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை 579 566
அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் 577 565
கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம் 573 561
அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் 572 548
திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் 571 553
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை 571 552
சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை 570 551
அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி 566 544
அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் 565 545
அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் 564 539
அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் 561 535
அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி 560 539
அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் 559 536
அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் 557 530
அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் 556 531
அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி 554 530

இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் ஓரிரு மதிப்பெண்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment