Advertisment

TN Medical Counselling 2023: தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட் ஆஃப் என்ன? கல்வியாளர் அஸ்வின் கணிப்பு

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்: அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கட் ஆஃப் எவ்வளவு? எந்த ரேங்க் வரை இடம் கிடைக்கும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
counselling

கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எவ்வளவு இருக்கும்? எந்த ரேங்க் வரை இடம் கிடைக்கும்? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைகான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒவ்வொரு பிரிவுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளின் இடங்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு? எந்த ரேங்க் வரை இடங்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் அட்மிஷன்: 7.5 இட ஒதுக்கீட்டில் இடம் பெறும் டாப் 10 அரசுப் பள்ளி மாணவர்கள் பட்டியல்

நீட் கட் ஆஃப் மதிப்பெண்கள் தொடர்பாக கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோவில், தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5050 இடங்கள் உள்ளன. இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியில் 125 இடங்கள் உள்ளன. எனவே மொத்தம் 5175 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்கள் சென்றுவிடும். மீதமுள்ள 85% என்பது 4398 இடங்கள். இதில் 45 இடங்கள் இ.எஸ்.ஐ ஒதுக்கீட்டுக்குச் சென்று விடும். எனவே மீதமுள்ள 4353 இடங்கள் மாநில ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். இதில் 7.5% இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். எனவே மீதமுள்ள 4026 இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

இதில் பிரிவு வாரியாக கிடைக்கக் கூடிய இடங்களின் எண்ணிக்கை

பொதுப் பிரிவு – 1248

BC – 1067

BCM – 141

MBC – 805

SC – 604

SCA – 121

ST – 40

இதில் ஒரு சில இடங்கள் மாறுபடலாம். தரவரிசைப் பட்டியலின்படி பொதுப் பிரிவுக்குள் 802 பி.சி மாணவர்களும், 49 பி.சி முஸ்லீம் மாணவர்களும், 234 எம்.பி.சி மாணவர்களும், 47 எஸ்.சி மாணவர்களும், 3 எஸ்.சி.ஏ மாணவர்களும் உள்ளனர். இவர் பொதுப்பிரிவு இடங்களை எடுத்துவிடுவார்கள்.

எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பொதுப் பிரிவு – 609

BC – 561

BCM – 542

MBC – 533

SC – 457

SCA – 383

ST – 360

எனவே கடந்த முறையை விட ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 30 – 50 மதிப்பெண்கள் வரை கட் ஆஃப் உயர்ந்துள்ளது.

எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க்

பொதுப் பிரிவு – 608

BC – 1869

BCM – 190

MBC – 1039

SC – 651

SCA – 124

ST – 40

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment