Advertisment

தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி; இந்த ஆண்டு நடக்குமா?

தமிழக அரசு இலவச நீட் பயிற்சி வகுப்புகள்; இந்த ஆண்டு நடக்குமா? இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET coaching

நீட் பயிற்சி மையங்களில் நிகழ்ந்த மாணவர் இலவச நீட் பயிற்சி (பிரதிநிதித்துவ படம்)

வழக்கமாக தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு இலவச நீட் பயிற்சி நடத்துவது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Advertisment

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இதற்காக மாணவர்கள் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ இடங்களை அதிக அளவில் கைப்பற்றுவது நீட் ரிப்பீட்டர்களே. இவற்றில் பெரும்பாலான நீட் ரிப்பீட்டர்கள் தனியார் பயிற்சி மையங்களில் கணிசமாக செலவு செய்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு : புதுவை ஆளுனர் புதிய அறிவிப்பு

ஆனால், அரசுப் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலானோரால் தனியார் பயிற்சி நிறுவனங்களில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற முடியாத சூழல் உள்ளது. இதனையடுத்து கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இருந்த 2018- 2019-ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை நீட் இலவசப் பயிற்சியைத் தொடங்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழகத்தை தற்போது ஆளும் தி.மு.க அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி கடந்த ஆண்டு வரை இ-பாக்ஸ் ஆன்லைன் தளம் மூலம் தொடர்ந்தது. மேலும், நேரடி வகுப்புகளும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், தனியார் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் அடுத்த நீட் தேர்வுக்குத் தயாராகிவிட்ட நிலையில், இந்த ஆண்டு இலவச நீட் பயிற்சி நடத்துவது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், இந்த ஆண்டும் இலவச நீட் பயிற்சியை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பயிற்சியாளர்களுடன் அரசு இதுவரை ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலவசப் பயிற்சி குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு நிறைய கோரிக்கைகள் வந்துள்ளது. அதேநேரம், இந்த ஆண்டு நீட் பயிற்சி வகுப்புகளை நேரடியாக நடத்த வேண்டும் என்று ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது, இதனால் பயிற்றுவிப்பாளர்ளிடம் மாணவர்கள் எளிமையாக கற்றுக் கொள்ள முடியும். எனவே அரசு விரைவில் நீட் பயிற்சியை தொடங்கும். குறைந்தது 25,000 மாணவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்பார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், 11 ஆம் வகுப்பு முதல் நீட் இலவசப் பயிற்சியை நடத்தலாமா என்று அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Tamil Nadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment