/indian-express-tamil/media/media_files/2025/05/04/E2Mp5LIIhDFsMWRSYk3g.jpg)
நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முன்பாக எழுத வேண்டிய முக்கிய தேர்வு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களுக்கு வருடந்தோறும் சுமார் 20 மாணவர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.
12 ஆம் வகுப்பு முடித்து மருத்துவ கனவுடன் இருக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகுவர். அதேநேரம் ஒரு முறை அல்லது இரு முறை நீட் தேர்வு எழுதி இடம் கிடைக்காதவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்வுக்காக முழு நேரம் படித்து பயிற்சி பெற்று தயாராகுவர்.
இந்தநிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முன்பு அவசியம் எழுத வேண்டிய முக்கிய தேர்வு குறித்து, நீட் ஸ்ட்ராடஜிஸ் தமிழ் என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜே.இ.இ முதன்மைத் தேர்வு எழுதுவது சிறந்தது. நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு, ஜே.இ.இ பொறியியல் நுழைவுத் தேர்வு, இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம்.
இரண்டு தேர்வுகளையும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இரண்டு தேர்வுகளிலும் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் உள்ளன. இந்த 2 பகுதிகளில் இருந்தும் ஜே.இ.இ தேர்வில் கேட்கப்படும் பல வினாக்கள், நீட் தேர்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்கப்படுகின்றன.
ஜே.இ.இ வினாத்தாள் தேர்வுக்கு பின்னர் எளிதாக ஆன்லைனில் கிடைக்கும் என்றாலும், தேர்வை நேரடியாக எழுதுவது உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். நீட் தேர்வுக்கு முன்னதாக ஜே.இ.இ தேர்வு எழுதுவது புதிய மாணவர்களுக்கு தேர்வு அனுபவம், கேள்விகள் கேட்கப்படும் விதம், நேர மேலாண்மை, விடையளிக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை கையாள்வது போன்றவற்றை கற்றுக் கொள்ள உதவும். மேலும் தேர்வுக்கு எந்த அளவிற்கு தயாராகி இருக்கிறோம் என்பதை பரிசோதித்துக் கொள்ளவும் உதவும்.
எனவே நீட் தேர்வுக்கு தயாராகுபவர்கள், ஜே.இ.இ மெயின் தேர்வின் ஜனவரி மற்றும் ஏப்ரல் என இரண்டு அமர்வுகளையும் எழுதி பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us