Advertisment

NEET Repeaters Course: நீட் தேர்வு ரிப்பீட்டர்ஸ் அட்டென்ஷன் ப்ளீஸ்... உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் கோச்சிங் சென்டரா? சுயமாக படிப்பதா?

நீட் தேர்வை திரும்ப எழுத விரும்புகிறீர்களா? சுய படிப்பா? கோச்சிங்கா? எது சிறந்தது? நிபுணர்களின் விளக்கங்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET-UG-2023-result

நீட் தேர்வு

இந்த நீட் தேர்வில் சரியாக செயல்படாத பலரும், அடுத்த ஆண்டு முயற்சிக்கலாம் என கருதுகின்றனர். இப்படி அடுத்த ஆண்டு முயற்சிக்கு செல்பவர்களுக்கு சுய படிப்பு போதுமானதா? கோச்சிங் தேவையா? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) முடிவுகள் ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேவையான மதிப்பெண்களை பெறாத பெரும்பாலானவர்கள் அடுத்த ஆண்டு முயற்சிக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், அடுத்த ஆண்டு முயற்சிக்க விரும்பினால், நீங்கள் இரண்டு பாதைகளில் செல்லலாம், நீங்கள் ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேரலாம் அல்லது சுய படிப்பை தேர்ந்தெடுக்கலாம். இதனிடையே எது சிறந்த வழி என edexlive ஊடகம் நிபுணர்களின் கருத்துகளுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: NEET UG 2023 Counseling: நீட் தேர்வர்களுக்கு குட் நியூஸ்; மேலும் 326 எம்.பி.பி.எஸ் சீட்கள்; 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள், கோச்சிங் தான் சிறந்த வழி என்று கூறுகின்றனர். பயிற்சி வகுப்புகள் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு நடைபெறும். 11 மற்றும் 12 வகுப்பு பாடங்களை ஒருங்கிணைத்து பயிற்சி வழங்கப்படும். நீட் தேர்வுக்கு முக்கியமான NCERT உள்ளடக்கத்தின் பயன்பாட்டுப் பகுதியில் கவனம் செலுத்தி பயிற்சி வழங்கப்படும். மாணவர்களுக்கு MCQ அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், ரிப்பீட்டர்கள் ஏற்கனவே பாடத்திட்டத்தின் அடிப்படைக் கருத்துகளை நன்கு அறிந்திருக்கிறார்கள். எனவே, எட்டு முதல் 10 மாதங்களுக்குள் கடுமையான பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வு, திருத்தம் மற்றும் சந்தேகத்தை நிவர்த்தி செய்வது அவசியம். கூடுதலாக ரிப்பீட்டர்களுக்கு வாரியத் தேர்வுகள் குறித்த அழுத்தம் இல்லாததால் முழு நேர பயிற்சி அளிக்க முடியும். என்று பயிற்சி நிறுவனங்கள் கூறுகின்றன.

ஒரு மாணவர் தனது பன்னிரண்டாம் வகுப்பு வாரியத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, மருத்துவக் கல்வியில் ஆர்வத்துடன் இருந்து நீட் தேர்வில் சராசரிக்கு சற்று அதிகமாக இருந்தால், அவர்கள் நிச்சயமாக மறுமுயற்சிக்குச் செல்ல வேண்டும். தற்போது பயிற்சி நிறுவனங்களில் புதியவர்களை விட ரிப்பீட்டர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது, ஏனெனில் புதியவர்கள் நீட் தயாரிப்புடன் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை படிப்பது கடினம். ரிப்பீட்டர் படிப்புகளில் அதிக சேர்க்கை மற்றும் அதிக வெற்றி விகிதங்கள் உள்ளன.

முதலாவதாக, தனிப்பயனாக்கப்பட்ட கற்றலில் கவனம் செலுத்தப்படுகிறது, மாணவர்கள் தங்கள் முந்தைய முயற்சிகளில் சவால்களை எதிர்கொண்ட குறிப்பிட்ட பகுதிகளைக் கண்டறிந்து, அந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கப்படுகிறது. கூடுதலாக, விரிவான புத்தகங்கள் மற்றும் வழக்கமான மதிப்பீடுகள் மூலம் விரிவான பயிற்சி மற்றும் திருத்தங்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தன்னம்பிக்கையைப் பெறுவதற்கும், தேர்வு எழுதும் திறனை மேம்படுத்துவதற்கும் பலவிதமான பயிற்சிக் கேள்விகள், முந்தைய ஆண்டுகளின் தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகள் பயிற்சி நிறுவனங்களால வழங்கப்படுகிறது. என்றும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நீட் ரிப்பீட்டர்ஸை பொறுத்தவரை இரண்டு வகையாக உள்ளனர். ஒருவர், முதல் முயற்சியிலேயே நல்ல மதிப்பெண் பெற்றவர், பொதுவாக 400+ மதிப்பெண் பெற்றவர், ஆனால் சிறந்த அரசுக் கல்லூரியில் சேர விரும்புபவர். இவர் மறுமுயற்சியில் ஒன்று அல்லது இரண்டு பலவீனமான புள்ளிகளில் கவனம் செலுத்த விரும்புகிறார். அதேநேரம், 400 க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மற்ற மாணவர்கள் ஒட்டுமொத்த பாடங்கள் மற்றும் தலைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இருவருக்குமான உத்திகள் வேறு. என்றும் பயிற்சி நிறுவனங்கள் கூறுகின்றன.

அதேநேரம் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், பெரும்பாலான பயிற்சி நிறுவனங்கள் முழுநேரப் பள்ளிகளாகச் செயல்படுவதால், மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் பலவற்றை வழங்குவதால், ரிப்பீட்டர் படிப்புகள் மிகவும் விலை உயர்ந்தவை. சராசரியாக, இந்தப் படிப்புகளுக்கு சுமார் 80,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகும். சில காரணங்களால், ஒரு மாணவர் தனது ட்ராப் ஆண்டில் பயிற்சி நிறுவனத்தில் சேர முடியாமலோ அல்லது விரும்பாமலோ இருந்தால், சந்தேகங்களைத் தீர்க்க குறிப்பிட்ட தலைப்புகள் மற்றும் அத்தியாயங்களில் கவனம் செலுத்தும் பல YouTube வீடியோக்கள் ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கின்றன. இது தவிர, நீங்கள் கோச்சிங் எடுக்கிறீர்களோ இல்லையோ, வழக்கமான மாதிரி தேர்வுகள் மிகவும் முக்கியம். மாணவர்கள் அவற்றை அணுக விரும்பினால், பல மாதிரி தேர்வுகளும் இணையத்தில் கிடைக்கின்றன, என்று கூறினார்.

எந்த பயிற்சியும் இல்லாமல் படிக்கும் மாணவர்களும் நல்ல வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளனர். சுய-படிப்பு என்பது தன்னிறைவைக் கண்டறிவதற்கான ஒரு வழியாகும், ஆனால் அது தனிநபர் சார்ந்தது. தனிப்பயிற்சியில் சில பகுதிகள் கடினமாக இருக்கலாம். குறிப்பாக இயற்பியல் கணக்கீடுகள் கடினமாக இருக்கலாம், அவற்றிற்கு புத்தகங்கள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் வீடியோக்கள் மூலமும் தெளிவு பெறலாம். எனவே சுய படிப்பு என்பது தனிநபர் விருப்பத்தைச் சார்ந்தது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment