10,650 புதிய எம்.பி.பி.எஸ் இடங்கள், 41 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல்: கலந்தாய்வு எப்போது?

2024 சுதந்திர தின உரையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ இடங்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்த பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியைச் செயல்படுத்தும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2024 சுதந்திர தின உரையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ இடங்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்த பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியைச் செயல்படுத்தும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

author-image
abhisudha
New Update
NEET UG seats increase

NMC approves 10,650 new MBBS seats, 41 new medical colleges

இந்தியாவில் மருத்துவக் கல்வித் துறையில் ஒரு திருப்புமுனையாக, தேசிய மருத்துவ ஆணையம் (NMC), 2024-25 கல்வியாண்டுக்காக 10,650 புதிய எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும், நாடு முழுவதும் 41 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. 

Advertisment

2024 சுதந்திர தின உரையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ இடங்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்த பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியைச் செயல்படுத்தும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய விவரங்கள்:

புதிதாக 41 மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கப்பட்டதன் மூலம், நாட்டில் உள்ள மொத்த மருத்துவ நிறுவனங்களின் எண்ணிக்கை 816 ஆக உயர்ந்துள்ளது.

இந்த இடங்களின் அதிகரிப்பால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் (INI) உள்ள இடங்கள் உட்பட, மொத்த எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 1,37,600 ஐ எட்டும்.

Advertisment
Advertisements

தேசிய மருத்துவ ஆணைய தலைவர் டாக்டர். அபிஜாத் ஷேத் அளித்த தகவலின்படி, இளங்கலை (UG) இடங்களை அதிகரிக்கக் கோரி அரசு கல்லூரிகளிலிருந்து 41-ம், தனியார் நிறுவனங்களிடமிருந்து 129-ம் என மொத்தம் 170 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 10,650 இடங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

முதுகலையிலும் இடங்கள் உயர்வு!

இளங்கலை மட்டுமின்றி, முதுகலை (PG) மருத்துவ இடங்களிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட முதுகலை இடங்களுக்காக 3,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு வந்துள்ளன.

இந்த ஆண்டு சுமார் 5,000 முதுகலை இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்படும் என்று டாக்டர். ஷேத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் மூலம், நாடு முழுவதும் மொத்த முதுகலை இடங்களின் எண்ணிக்கை 67,000 ஆக உயரும்.

இந்த ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை இரண்டையும் சேர்த்து சுமார் 15,000 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன.

ஆராய்ச்சி மற்றும் வெளிப்படைத்தன்மை

மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தேசிய மருத்துவ ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

நிலையான மருத்துவப் பாடத்திட்டத்தில் மருத்துவ ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஆய்வு செய்து வருகிறது.

ஆராய்ச்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICMR) இணைந்து செயல்படத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த ஆண்டு, மருத்துவ மதிப்பீடு மற்றும் தர நிர்ணய வாரியத்தின் (MARB) முடிவுகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து மேல்முறையீடுகளும் நீதிமன்றத் தலையீடு இன்றி தேசிய மருத்துவ ஆணையத்தால் தீர்க்கப்பட்டுள்ளன. இது அண்மைக் கால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்று டாக்டர். ஷேத் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்தகட்ட அறிவிப்பு விரைவில்

இறுதி ஒப்புதல் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், இந்த நடைமுறைகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அங்கீகாரம், தேர்வுகள் மற்றும் இருக்கை ஒதுக்கீட்டு அறிக்கை ஒப்புதல்களுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். 2025-26 கல்வியாண்டுக்கான விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான போர்ட்டல் நவம்பர் தொடக்கத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

Mbbs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: