Advertisment

NLC யில் படித்துக்கொண்டே வேலை; 10,12 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரிய வாய்ப்பு

NLC india invites application for ITI apprentice training: என்.எல்.சி இந்தியாவில் ஐடிஐ அப்ரண்டிஸ் பயிற்சி வேலைவாய்ப்பு; 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க

author-image
WebDesk
New Update
நெய்வேலி என்.எல்.சி-யில் 550 பணியிடங்கள்; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், ஐடிஐ படித்துக் கொண்டே அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisment

என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய பொதுத்துறை நிறுவனமான, என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி விபரங்கள்

Fitter fresher

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: 2019/2020/2021 ஆம் ஆண்டுகளில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு ரூ. 8766, இரண்டாம் ஆண்டு ரூ. 10,019

பயிற்சி கால அளவு: 24 மாதங்கள்

Electrician fresher

Welder fresher

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் (Biology/Science Group) பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு ரூ. 8766, அடுத்த மூன்று மாதங்கள் ரூ. 10,019

பயிற்சி கால அளவு: 15 மாதங்கள்

Medical Lab Technician Pathology

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் (Biology/Science Group) பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு ரூ. 8766, அடுத்த மூன்று மாதங்கள் ரூ. 10,019

பயிற்சி கால அளவு: 15 மாதங்கள்

Medical Lab Technician Radiology

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 05

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் (Biology/Science Group) பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு ரூ. 8766, அடுத்த மூன்று மாதங்கள் ரூ. 10,019

பயிற்சி கால அளவு: 15 மாதங்கள்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021 ஆகும். விண்ணப்பிக்க www.nlcindia.in  என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை, தேவையான ஆவணங்களுடன் 23.08.2021 மாலை 5 மணிக்குள் தபால் மூலமாக அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி

     பொது மேலாளர்,

     கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,

     என்.எல்.சி இந்தியா நிறுவனம்,

     வட்டம்- 20, நெய்வேலி – 607803.

தேவையான ஆவணங்கள்

9, 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Nlc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment