NLC Jobs; என்.எல்.சியில் 474 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 474 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
NLC India recruitment 2022 for 474 ITI and Graduate Apprentices apply soon: தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 474 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி தேதியாகும்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழகத்தில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 474 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடு வழங்கியவர்களுக்கான பணியிடங்களாகும்.
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்; ரூ. 10,019
PASAA – 20
கல்வித் தகுதி: COPA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,766
Commerce - 25
கல்வித் தகுதி: B.Com படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 12, 524
Computer Science - 35
கல்வித் தகுதி: Bsc., Computer Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 12, 524
Computer Application - 20
கல்வித் தகுதி: BCA படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 12, 524
Business Administration - 20
கல்வித் தகுதி: BBA படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 12, 524
Geology - 5
கல்வித் தகுதி: Bsc.,Geology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 12, 524
வயது தகுதி: 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 24.08.2022 க்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தினை PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 31.08.2022 க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.