/indian-express-tamil/media/media_files/2025/09/19/nlc-jobs-2025-09-19-18-29-51.jpg)
தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1101 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21.10.2025 கடைசி தேதியாகும்.
Trade Apprentice
காலியிடங்களின் எண்ணிக்கை: 787
Fitter - 124
Turner - 45
Mechanic (Motor Vehicle) - 120
Electrician - 174
Wireman - 119
Mechanic (Diesel) - 5
Plumber - 5
Stenographer - 20
Welder - 125
Computer Operator and Programming Assistant (COPA) - 30
Refrigeration and Air Conditioning Mechanic - 10
Moulder - 5
Carpenter - 5
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை; ரூ. 10,019
Graduate Apprenticeship Training
காலியிடங்களின் எண்ணிக்கை: 314
B.Pharm – 5
B.Com. – 68
B.Sc. (Comp.Sci.) – 89
B.C.A – 49
B.B.A. – 47
B.Sc. (Geology) – 12
B.Sc. (Chemistry) – 11
Nursing – 34
Micro Biology – 1
கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023/ 2024/ 2025 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 12,524 (B.Pharm – 15,028)
வயது தகுதி: 01.04.2025 அன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட கல்வி தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nlcindia.in/website/en/careers/jobs/trainees_apprentices.html என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2025
இந்த பயிற்சி வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.