/tamil-ie/media/media_files/uploads/2022/06/ration-shop.jpg)
விண்ணப்பிப்பது தொடர்பாக TNCOOP DEPT என்ற வலையொளி தளத்திலும் காணொலி பதிவேற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள ரேஷன் கடைகளில் 231 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு எழுத்து தேர்வு இல்லாமல் ஆள்கள் நியமிக்கப்படுகிறார்கள் என திருச்சி கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.
அதில், “திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள பதிவாளர் கட்டுப்பாட்டில் பல்வேறு ரேஷன் கடைகளில் 231 விற்பனையாளர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ளது.
இதற்கு விண்ணப்பதாரர்கள் https:/www.drbtry.in என்ற இணையதளம் வழியான நவம்பர் 14ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணபிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் தகுதிகள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் வழிமுறைகள் அனைத்தும் மேற்கூறிய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை https:/www.drbtry.in என்ற இணையத்தில் நீங்கள் படித்து அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிப்பது தொடர்பாக TNCOOP DEPT என்ற வலையொளி தளத்திலும் காணொலி பதிவேற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 0431-2420545 என்ற எண்ணிலும், jrtry.rcs@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.