ONGC Jobs: ஓ.என்.ஜி.சி வேலை வாய்ப்பு; 2623 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 2623 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, ஐ.டி.ஐ, 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 2623 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, ஐ.டி.ஐ, 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
Ambikapathi Karuppaiah
New Update
ONGC

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) ஆகும். இது இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் ஆய்வு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இது ‘மஹாரத்னா’ மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு கிளைகளில் 2623 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.11.2025

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 2623

நிரப்பப்படும் பயிற்சி இடங்கள்

Accounts Executive

Office Assistant

Secretarial Assistant

Computer Operator and Programming Assistant (COPA)

Draughtsman (Civil)

Electrician

Electronics Mechanic

Fitter

Instrument Mechanic

Information & Communication Technology System Maintenance (ICTSM)

Laboratory Assistant (Chemical Plant)

Machinist

Mechanic (Motor Vehicle)

Mechanic Diesel

Medical Laboratory Technician (Cardiology and Physiology)

Medical Laboratory Technician (Pathology)

Medical Laboratory Technician (Radiology)

Refrigeration and Air Conditioning Mechanic

Surveyor

Stenographer

Welder

Civil

Computer Science

Electronics & Telecommunication

Electrical

Electronics

Instrumentation

Mechanical  

கல்வித் தகுதி

Accounts Executive, Office Assistant பணியிடங்களுக்கு Degree in Commerce (B.Com)/ B.A. or B.B.A படித்திருக்க வேண்டும்.

Laboratory Assistant (Chemical Plant) பணியிடங்களுக்கு B.Sc படித்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

Secretarial Assistant பணியிடங்களுக்கு Stenography (English) முடித்திருக்க வேண்டும்.

Computer Operator and Programming Assistant (COPA), Draughtsman (Civil), Electrician, Electronics Mechanic, Fitter, Instrument Mechanic, Information & Communication Technology System Maintenance (ICTSM), Machinist, Mechanic (Motor Vehicle), Mechanic Diesel, Medical Laboratory Technician (Cardiology and Physiology), Medical Laboratory Technician (Pathology), Medical Laboratory Technician (Radiology), Refrigeration and Air Conditioning Mechanic, Surveyor, Welder, Stenographer ஆகிய பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

Civil, Computer Science, Electronics & Telecommunication, Electrical, Electronics, Instrumentation, Mechanical ஆகிய பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 06.11.2025 அன்று 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊக்கத்தொகை: பட்டதாரி பணியிடங்களுக்கு ரூ. 12,300

டிப்ளமோ பணியிடங்களுக்கு ரூ. 10,900

ஐ.டி.ஐ பணியிடங்களுக்கு ரூ. 9,600, - ரூ. 10,560

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தகுதி பணியிடங்களுக்கு ரூ. 8,200

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://apprenticeshipindia.gov.in அல்லது https://nats.education.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினப் பார்வையிடவும்.

Ongc Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: