Advertisment

பவர்கிரிட் நிறுவனத்தில் 800 காலிப் பணியிடங்கள்... பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

Powergrid Corporation of India Limited is planning to fill 800 Field Engineers and Field Supervisors Vacancies : பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் 800 கள பொறியாளர்கள் மற்றும் கள மேற்பார்வையாளர்கள் காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பவர்கிரிட் நிறுவனத்தில் 800 காலிப் பணியிடங்கள்... பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

PGCIL recruitment

Powergrid PGCIL Recruitment 2022 Notification: பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், காலியாக உள்ள 800, பீல்டு என்ஜினியர்கள் (எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்) மற்றும் பீல்டு சூப்பர்வைசர்கள் ஆகிய பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியிட்பபட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் நவம்பர் 21-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பணியிடத்திற்கான தகவல்கள் :

பதவியின் பெயர் – பீல்டு என்ஜினியர்கள் மற்றும் சூப்பர்வைசர்கள்

காலியிடங்கள் – 800

சம்பள விபரம் – டிகிரி படித்தவர்கள் – 30,000, டிப்ளமோ படித்தவர்கள் ரூ 23,000

வேலையிடம் – இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்க கடைசி தேதி – டிசம்பர் 11, 2022

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

விண்ணப்பிக்கும் இணையதளம்powergrid.in

வயது வரம்பு

இந்த பதவிகளுக்காக வயது வரம்பு 29 ஆண்டுகள். வயதை கணக்கிடுவதற்கான முக்கிய தேதி டிசம்பர் 11, 2022. அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :

பொது பிரிவினருக்கு (OBC EWS) கள பொறியாளருக்கு – 400

கள மேற்பார்வையாளருக்கு – 300

எஸ்.சி.எஸ்டி. பிஎச், இஎஸ்எம் – கட்டணமில்லை

கட்டணம் செலுத்தும் முறை – ஆன்லைன்

தேர்வு செய்யும் முறை :

பொறியாளர் பதவிக்கு நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே முடிக்க வாய்ப்புள்ளது. அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும். கள பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளருக்கான ஆள்சேர்ப்பு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடைபெறும்.

தேர்வு முறை :

எழுத்துத்தேர்வு – 50 தொழில்நுட்ப கேள்விகள் +25 திறன் கேள்விகள்

பீல்டு என்ஜினியர் பதவிக்கு மட்டும் நேர்காணல், நடைபெறும்.

ஆவண சரிபார்ப்பு, மற்றும் மருத்துவ தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

பிஜிசிஐஎல் (PGCIL)  ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 இலிருந்து தகுதியைச் சரிபார்த்து www.powergrid.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றவும் கட்டணம் செலுத்துங்கள் விண்ணப்பப் படிவத்தை பிரின்ட் செய்துகொள்ளவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment