/indian-express-tamil/media/media_files/2025/11/03/puducherry-govt-centac-50-percentage-post-graduate-medical-college-seats-counselling-tamil-news-2025-11-03-21-30-06.jpg)
2025-26-கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த ஆண்டைப்போல புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 387 முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான இடங்களில் 194 இடங்கள் அரசு ஒதுக்கீடாகவும், 157 இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலசங்கம் மாணவர் நலன் கருதி ராஜ்பவன் வை.பாலா என்ற பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது முதுநிலை நீட்தேர்வு (2025-26) தகுதி மற்றும் திறன் நுழைவுத்தேர்வு நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் புதுச்சேரி மாநில முதுநிலை மருத்துவ மாணவர்கள் நுழைவுத் தேர்வின் முடிவானது மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த 2025-26-கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த ஆண்டைப்போல புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 387 முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான இடங்களில் 194 இடங்கள் அரசு ஒதுக்கீடு (Govt.Quota) 157 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு (Management Quota) ஆகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்ரீ மணக்குளவிநாயகர் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் பிம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் MD/MS 315-இடங்கள் தற்போது இந்த 2025-26-ம் கல்வி ஆண்டு கலந்தாய்வுக்கு வருகின்றன. இதில் 158-இடங்கள் புதுச்சேரி மாநில அரசு ஒதுக்கீட்டில் (Govt. Quota) சென்டாக் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதேபோல மேற்படி 3-தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்பிற்கான MD/MS 157-இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் (Management Quota) சென்டாக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. அதேபோல இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மத்திய மருத்துவ கவுன்சில் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட ஏற்கனவே கடந்த ஆண்டு (2024-25) மொத்தம் உள்ள முதுநிலை மருத்துவ இடங்கள் 56-MD/MS இடங்கள் இருந்தன. தற்போது இந்த 2025-26-கல்வி ஆண்டுக்கு கூடுதலாக 16-MD/MS இடங்கள் மத்திய மருத்துவ கவுன்சில் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டள்ளது. ஆகையால் இந்த ஆண்டு முதுநிலை மருத்துவ கல்லூரியில் உள்ள MD/MS 72-இடங்கள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்படி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 72-MD/MS இடங்களில் 36 அரசு ஒதுக்கீட்டு (Govt. Quta) இடங்களாகவும், IGMC-யில் மீதமுள்ள 36-MD/MS இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்படும் என்பதை புதுச்சேரி மாணக்கர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஆகமொத்தம் புதுவை மாநிலத்தில் உள்ள 3-தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 315-MD/MS இடங்களும், அதே போல இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 72-MD/MS இடங்கள் உள்ளன.
தற்போது சென்டாக் நிர்வாகத்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 387-முதுநிலை மருத்துவ இடங்களில் 50% விழுக்காடு அதாவது 194-முதுநிலை மருத்துவ இடங்கள் அரசு ஒதுக்கீடாக கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் 142- இடங்கள் Clinical படிப்பிற்கான இடங்களாகவும், 52-இடங்கள் Non-clinical படிப்பிற்கான இடங்களாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் புதுவை மாநில மாணக்கர்கள் அகில இந்திய மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க எம்.சி.சி மத்திய மருத்துவ கவுன்சில் கமிட்டியின் இணையதளத்தையும், புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிக்க சென்டாக் இணையதளத்தையும் சரிபார்த்து முதல் கட்ட முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு மாணாக்கர்களையும், அவர்களது பெற்றோர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us