ஆசிய சாதனை புத்தகத்தில் புதுச்சேரி மாணவர் நூல் வெளியிட்டு சாதனை: எதிர்க் கட்சித் தலைவர் பாராட்டு

இந்நூலை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதில் இத்தகைய அரிய நூலைத் தயாரித்த மாணவன் திவ்யேஷை அங்கீகரித்து, ஆசிய அளவிலான "மகா வித்தகர்" (Grand Master) என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளனர்.

இந்நூலை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதில் இத்தகைய அரிய நூலைத் தயாரித்த மாணவன் திவ்யேஷை அங்கீகரித்து, ஆசிய அளவிலான "மகா வித்தகர்" (Grand Master) என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளனர்.

author-image
abhisudha
New Update
WhatsApp Image 2025-10-25 at 11.55.47 AM

Puducherry

புதுச்சேரி: வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் திவ்யேஷ், 'முடிசூடிய மனம்' (The Crowned Mind) என்ற ஆன்மீக நூலை எழுதி, இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று, 'மகா வித்தகர்' (Grand Master) பட்டம் வென்று புதுச்சேரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். இச்சாதனை புரிந்த மாணவரை புதுச்சேரி திமுக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
 
ஆன்மீக நூலில் சாதனை

Advertisment

புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் வள்ளியம்மை நகரில் வசிக்கும் (PRTC) பேருந்து ஓட்டுநர் சரவணன் என்பவரின் மகன் திவ்யேஷ், ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

திவ்யேஷ், ஆன்மீகம், மனித சிந்தனையின் பரிணாமம், சுதந்திரச் சிந்தனை, அரசியல் பார்வை மற்றும் வாழ்வின் விழிப்புணர்வு ஆகியவற்றைஇன்றைய மாணவர் சமுதாயம் எளிதில் அறியும் வகையில், "முடிசூடிய மனம்" (The Crowned Mind) என்ற ஆன்மீக நூலை ஆங்கிலத்தில் தயாரித்துள்ளார். மனித ஆன்மாவின் உச்சக் குரலாகப் பார்க்கப்படும் இந்த நூலை உலகறியச் செய்யும் நோக்கில், மாணவர் திவ்யேஷ் அதனை இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்தார்.

அங்கீகாரமும் 'மகா வித்தகர்' பட்டமும்

இந்நூலை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதில் இத்தகைய அரிய நூலைத் தயாரித்த மாணவன் திவ்யேஷை அங்கீகரித்து, ஆசிய அளவிலான "மகா வித்தகர்" (Grand Master) என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளனர். மேலும், இந்த நூல் அமேசான் நிறுவனம் மூலம் உலக அளவில் சந்தைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

இளம் வயதில் இந்த அரிய சாதனையைப் படைத்து புதுச்சேரிக்குச் சிறப்பு சேர்த்துள்ள மாணவன் திவ்யேஷ்-ஐ, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று (அக். 25) நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினார்.

அப்போது, பிஆர்டிசி போக்குவரத்துக் கழக தொமுச செயலாளர் ராஜேந்திரன், மாணவரின் தந்தை சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: