Advertisment

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் புதுச்சேரி மிஸ்ஸிங்; ஆசிரியர்கள் ஏமாற்றம்

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல்; புதுச்சேரியைச் சேர்ந்த யாரும் இல்லாததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
teacher

பள்ளி ஆசிரியர் (பிரதிநிதித்துவ படம்)

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், இந்தாண்டு புதுச்சேரியை சேர்ந்த ஒரு ஆசிரியருக்கு கூட இவ்விருது கிடைக்காதது புதுச்சேரி ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு, தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்தநிலையில், இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு: தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு

இந்தியா முழுவதும் இருந்து ஆசிரியர்கள் நேர்காணலில் பங்கேற்றதில் 50 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். புதுச்சேரி அரசு சார்பில் ஐந்து ஆசிரியர்கள் பெயர்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த பட்டியலில் ஒருவர் கூட புதுச்சேரி ஆசிரியர்கள் இல்லை. இது புதுச்சேரி ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Teachers Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment