Advertisment

சுகாதாரத் துறை வேலை; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

அரசு வேலை வாய்ப்பு

Pudukkottai Health Jobs: புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (I.T Coordinator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.C.A / B.E / B.Tech படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,500

வட்டார கணக்கு உதவியாளர் (Block Account Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Com Graduate or B.A., Corporate / BCS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,000

ஓட்டுநர் (Driver)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500

வட்டார விபர உள்ளீட்டாளர் (Block Data Entry Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500

செவித்திறன் ஆய்வாளர் (Audiologist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor in Audiology and Speech language pathology / B.Sc., (Speech & Hearing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 23,000

பாதுகாவலர்கள் (Security Guard)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

முடநீக்கியலாளர் (Physiotherapist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Physiotherapist (B.P.T) படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

கதிர்ப்பட பதிவாளர் (Radiographer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : B.Sc., Radiography படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,300

அறுவை சிகிச்சை உதவியாளர் (O.T Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : O.T Technician கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,200

ஆரம்ப கால தலையீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் (Early interventionist cum Special Educator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Sc., in Disability studies படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,000

சுகாதாரப் பணியாளர் (Sanitary Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

மருத்துவமனை பணியாளர் (MPHW)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.09.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment