/indian-express-tamil/media/media_files/2025/08/24/punjab-sind-bank-jobs-2025-08-24-14-53-50.jpg)
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் சிந்து வங்கியில் (Punjab & Sind Bank) சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 190 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Credit Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 130
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 64820-2340/1-67160-2680/10-93960
Agriculture Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 60
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s Degree (Graduation) in Agriculture/ Horticulture/ Dairy/ Animal Husbandry/ Forestry/ Veterinary Science/ Agriculture Engineering/ Pisciculture முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 64820-2340/1-67160-2680/10-93960
வயதுத் தகுதி: 01.09.2025 அன்று 23 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆங்கிலம் பொது அறிவு மற்றும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு ஆகியவற்றில் இருந்து 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம் 45 நிமிடங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://punjabandsindbank.co.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850. எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 100
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.