/indian-express-tamil/media/media_files/NP6HPKgZOi9LswlS8NDv.jpg)
ரைட்ஸ் (RITES) எனப்படும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2025
Senior Technical Assistant
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 600
Civil – 465
கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
Electrical – 27
கல்வித் தகுதி: Diploma in Electrical/ Electrical & Electronics Engineering படித்திருக்க வேண்டும்.
S&T – 8
கல்வித் தகுதி: Diploma in Engineering in Instrumentation/ Instrumentation & Control/ Electronics & Instrumentation/ Electrical & Instrumentation/ Electronics/ Electrical & Electronics படித்திருக்க வேண்டும்.
Mechanical – 65
கல்வித் தகுதி: Diploma in Engineering in Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing/ Mechanical & Automobile படித்திருக்க வேண்டும்.
Metallurgy – 13
கல்வித் தகுதி: Diploma in Metallurgy Engineering படித்திருக்க வேண்டும்.
Chemical – 11
கல்வித் தகுதி: Diploma in Chemical/ Petrochemical/ Chemical Technology/ Petrochemical Technology/ Plastic Engineering Technology/ Food/ Textile/ Leather Technology படித்திருக்க வேண்டும்.
Chemistry – 11
கல்வித் தகுதி: B.Sc. in Chemistry படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 29,735
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://rites.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 300. இ.டபுள்யூ.எஸ், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ரூ. 100
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.