/indian-express-tamil/media/media_files/2025/10/14/salem-sail-jobs-2025-10-14-20-46-08.jpg)
சேலத்தில் உள்ள செயில் நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசின் மகாரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலை எனப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 2 வகை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant Manager (Safety)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BE/ B.Tech மற்றும் PG Degree or Diploma in Industrial Safety படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000–3%–1,60,000
Jr Engineering Associate (Boiler Operation)
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: Diploma in Mechanical/ Electrical/ Chemical/ Power Plant/ Production / Instrumentation Engineering படித்திருக்க வேண்டும். மற்றும் Boiler Attendant Certificate of Competency படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 26600-3%-38920
வயதுத் தகுதி: 26.10.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: உதவி மேலாளர் பணியிடம் கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும். இளநிலை பொறியாளர் பணியிடங்கள் கணினி வழித் தேர்வு மூலம் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sailcareers.com/SAIL2025EN01_SALEM/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: உதவி மேலாளர் பணியிடங்களுக்கு பொதுப் பிரிவு, இ.டபுள்யூ.எஸ் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 700, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 200. இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு பொதுப் பிரிவு, இ.டபுள்யூ.எஸ் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 500, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 150.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us