Advertisment

சென்னையில் ஷிவ் நாடார் புதிய பல்கலைக்கழகம்: வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை

ஷிவ் நாடார் அறக்கட்டளை சென்னையில் பல துறைகளைக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shiv Nadar Foundation started new university in Chennai, shiv nadar started new varsity in chennai, shiv nadar foundation, ஷிவ் நாடார் அறக்கட்டளை தொடங்கிய புதிய பல்கலைக்கழகம், chennai, சென்னையில் புதிய பல்கலைக்கழகம், ஷிவ் நாடார், ஷிவ் நாடார் அறக்கட்டளை, hcl technologies pvt limited

ஷிவ் நாடார் அறக்கட்டளை சென்னையில் பல துறைகளைக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேச கிரேட்டர் நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு அடுத்து இது அவர்களின் இரண்டாவது பல்கலைக்கழகமாகும்.

Advertisment

சென்னையில் பல்கலைக்கழகம் தொடங்குவதைப் பற்றி எச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரும் அறக்கட்டளையின் அறங்காவலருமான ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா கூறுகையில், “என் தந்தை ஷிவ் நாடார் கல்வியால் உருவானவர். மக்களின் வாழ்க்கையை மாற்றும் கல்வியின் சக்தியை உறுதியாக நம்புகிறார். எனவே, சென்னையில் ஒரு உலகத் தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகத்தை அமைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு முக்கியமான நோக்கத்திற்காக அறிவைப் பரப்புவதைத் தாண்டி செய்யப்படுகிறது. ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை புதிய ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய வடிவ வெளிப்பாடுகளை உருவாக்குவதற்கான ஊக்கியாக இருக்கும்… இறுதியில் பொறுப்புள்ள, நன்கு பன்பட்ட குடிமக்களை உருவாக்க உதவுகிறது” என்று கூறினார்.

ஷிவ் நாடார் அறக்கட்டளை தொடங்கியுள்ள புதிய பல்கலைக்கழகம் 2021 முதல் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், மற்றும் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் ஆகிய இரண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை கல்வியாண்டைத் தொடங்குகிறது என்று ஷிவ் நாடார் வெளியிட்டுள்ள அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஷிவ் நாடார் அறக்கட்டளை பல்கலைக்கழகத்தில், ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், கணினி அறிவியல், பொறியியல் ஆகிய நான்கு ஆண்டு இளங்கலை படிப்புகளை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) நிபுணத்துவத்துடன் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சி.ஏ போன்ற தொழில்முறை இடங்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வணிகவியல் மற்றும் மேலாண்மை பள்ளி (தொழில்முறை கணக்கியல்) பகுப்பாய்வு மற்றும் நிதி துறைகளில் பரந்த அடிப்படையிலான கல்வி பின்னணியை வழங்கும் வர்த்தக இளங்கலை ஆகியவற்றை வணிக மற்றும் மேலாண்மை படிப்புகளை இந்த கல்லூரி வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிவ் நாடார் அறக்கட்டளை தொடங்கியுள்ள புதிய பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் ஊடகங்களிடம் கூறுகையில், “நாங்கள் இரண்டு கல்லூரிகளுடன் பல்கலைக்கழகத்தை அறிவித்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில், பல்கலைக்கழகம் ஒரு சட்டக் கல்லூரியை நிறுவுவது உட்பட அதன் சலுகைகளை கணிசமாக விரிவுபடுத்தும் என்று நம்புகிறோம். புதிய அறிவை உருவாக்குவதற்கும், உலகின் மனித மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களிக்கும் இந்த பயணத்தில் நாங்கள் இறங்கும்போது, புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை எங்களுடன் சேர அழைக்க இந்த வாய்ப்பையும் நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment