இந்தியாவில் ஒரு லட்சம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரால் இயக்கம்; 33 லட்சம் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி? மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்

ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையில், ஆந்திரப் பிரதேசம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. இங்கு 12,912 பள்ளிகள் ஒரு ஆசிரியரால் நடத்தப்படுகின்றன.

ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையில், ஆந்திரப் பிரதேசம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. இங்கு 12,912 பள்ளிகள் ஒரு ஆசிரியரால் நடத்தப்படுகின்றன.

author-image
abhisudha
New Update
Single Teacher Schools India MoE Data

Over 1 lakh single-teacher schools serve more than 33 lakh students in India: MoE data

இந்தியாவில் கல்வியின் நிலை குறித்த மத்திய கல்வி அமைச்சகம் (MoE) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் (1,04,125) ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்கி வருகின்றன. 2024-25 கல்வியாண்டில், இந்தப் பள்ளிகளில் சுமார் 33.76 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் மூலம், ஒரு பள்ளிக்குச் சராசரியாக 34 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

கல்வி உரிமைச் சட்டம் (RTE), ஆரம்ப வகுப்புகளுக்கு 30:1 என்ற விகிதத்திலும், உயர் ஆரம்ப வகுப்புகளுக்கு 35:1 என்ற விகிதத்திலும் ஆசிரியர்-மாணவர் விகிதத்தை (PTR) பராமரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ள நிலையில், இந்த நிலைமை அரசின் கல்வி இலக்குகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

மாநிலங்களின் நிலை என்ன?

ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையில், ஆந்திரப் பிரதேசம் (12,912 பள்ளிகள்) நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம் (9,508), ஜார்க்கண்ட் (9,172), மகாராஷ்டிரா (8,152), கர்நாடகா (7,349) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசம் (6,24,327 மாணவர்கள்) முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் (4,36,480) மற்றும் மேற்கு வங்காளம் (2,35,494) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Advertisment
Advertisements

குறையும் எண்ணிக்கை; அரசின் நடவடிக்கை

நல்ல வேளையாக, ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2022-23 கல்வியாண்டில் 1,18,190 ஆக இருந்த இந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை, தற்போது 1,04,125 ஆகச் சரிந்துள்ளது.

"பள்ளிகளை ஒன்றிணைத்தல்" மூலம் வளங்களைப் பயன்படுத்துவதை அதிகரிக்க அரசு முயற்சிப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் கற்பித்தல் செயல்முறையைத் தடுக்கின்றன. எனவே, மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்து, ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றும் அவர் கூறினார்.

சராசரி மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள இடங்கள்

ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள டெல்லி (9 பள்ளிகள்) மற்றும் சண்டிகரில் (0 பள்ளிகள்), ஒரு பள்ளிக்குச் சராசரி மாணவர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சண்டிகரில் 1,222 மாணவர்களும், டெல்லியில் 808 மாணவர்களும் சராசரியாக உள்ளனர். இது உள்கட்டமைப்பை உகந்த முறையில் பயன்படுத்துவதைக் குறிக்கிறது என்று அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

மிகக் குறைந்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளைக் கொண்ட யூனியன் பிரதேசமாக புதுச்சேரி, லடாக், சண்டிகர் ஆகியவை உள்ளன. டெல்லியில் வெறும் 9 ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்தவும், சட்டம் வகுத்த விகிதத்தை அடையவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

இந்த செய்தியை ஆங்கில மொழியில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: