தெற்கு ரயில்வேயில் சூப்பரான வேலை வாய்ப்பு; 3518 பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தெற்கு ரயில்வேயில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 3518 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தெற்கு ரயில்வேயில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 3518 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
Ambikapathi Karuppaiah
New Update
southern-railway-

தெற்கு ரயில்வேயில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3518 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்திய அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, கோவை, திருச்சி மண்டலங்களில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2025

காலியிடங்களின் விவரம்

Carriage & Wagon Works, Perambur – 1394 

Central Workshop, Golden Rock – 857 

Signal and Telecom Workshop Units, Podanur – 1267 

மேற்கண்ட பணிமனைகளில் Fitter, Turner, Welder, Welder (G&E), Advanced Welder, Painter, Electronic Mechanic, Mechanic (Motor Vehicle), Carpenter, Machinist, Electrician, Wireman, Refrigeration and AC Mechanic, Diesel Mechanic, Trimmer, PASSA, Plumber, Draughtsman (Civil) போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

ஊக்கத்தொகை: ரூ. 6000 - 7000

MLT (Radiology), MLT (Pathology), MLT (Cardiology) போன்ற பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 7000

வயது தகுதி: 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4,1618,1918 என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2025

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. ஆனால் எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

Southern Railway Indian Railways Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: