எஸ்.எஸ்.சி தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2022 ஆண்டுக்கான பன்னோக்கு பணியாளர் (Multi-Tasking (Non-Technical) Staff ) மற்றும் ஹவல்தார் தேர்வு (Havaldar Examination) அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அதில், காலியாக உள்ள 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி, அசாமி, பெங்காலி, மராத்தி, மணிப்பூரி ஆகிய 13 மொழிகளில் எழுத அனுமதி அளித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் விவரம்
பல்துறை சார் பணியாளர்கள் (Multi Tasking Staff)- 10,880 பணியிடங்கள் (தோராயமாக)
ஹவில்தார் (Havaldar)- 529 பணியிடங்கள்
தகுதி உள்ளவர்கள் பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்.சி மற்ரும் எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“