11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 முதன்மை பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய நடைமுறையே தொடரும் : தமிழக அரசு

11,12th tamilnadu Higher Secondary Course : தமிழக அரசு பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நான்கு முதன்மை பாடத்தொகுப்புகள் கொண்ட நடைமுறையே தொடரும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

tamilnadu 4 core subject stream retained
tamilnadu 4 core subject stream retained

Tamilnadu Scheme of Studies:  தமிழக அரசு பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நான்கு முதன்மை பாடத்தொகுப்புகள் கொண்ட நடைமுறையே தொடரும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டும் செபடம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ” தற்போது, நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய  மூன்று முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, மொழிப் பாடம்,  மற்றும் ஆங்கிலப் பாடங்கள் தவிர  மாணவர்கள் மூன்று பாடத்தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ , வரும் 2020-21ம்  கல்வி ஆண்டில் தேர்வு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்தது.


இந்நிலையில், முந்தைய அரசாணையை ரத்து செய்யும் ஆணையை  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில், ” 11, 12 ஆகிய மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்க்கல்விக்கான வாய்ப்புகள்/ வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடம் என்பதால் மாணாக்கர்களின் நலன் கருதி, மூன்று பாடத்தொகுப்பினை தேர்வு செய்யும் முந்தைய அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்றும், 2020-21ம்  கல்வி ஆண்டில் இருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகள் கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் பெற்றோர், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று இந்த அரசாணையை வெளிட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu 11 12th higher secondary 4 core subjects stream retained tamil nadu school education news

Next Story
இன்று மாலை ப்ளஸ் டூ ரிசல்ட்: 9 லட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்பு12th Board Exam Result Date 2020
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com