/indian-express-tamil/media/media_files/2025/06/22/tn-govt-jobs-2025-06-22-15-35-37.jpg)
தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கீழ் செயல்படும் சாலை பாதுகாப்பு கட்டுப்பாட்டு அலகில் சிறப்பு நிபுணர்கள், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Specialist in communication, Public Awareness and capacity Building
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Post graduate degree in Communication, Journalism படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 1,50,000
Specialist in Data Monitoring & Documentation
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Post graduate degree in Computer Science, Statistics, Data Science, Mathematics படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 1,50,000
Specialist in Road Safety Aspects
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor’s degree in Civil Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 1,50,000
Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 50,000
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma in Computer Applications / Information Technology படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 40,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cms.tn.gov.in/cms_migrated/document/announcements/RSMU_Notification_Application_250825.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: tnrsmu2025@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.