தமிழக சுகாதாரத் துறையில் 72 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

கோவை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 72 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

கோவை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 72 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
New Update
hospital worker

கோவை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் சித்த மருத்துவ அலுவலகத்தின் கீழ் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 72 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Consultant/ Homeopathy Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: BHMS படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Consultant/ Ayurveda Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BAMS படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Consultant/ Unani Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BUMS படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Consultant/ Yoga & Naturopathy Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: BNYS படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Diploma Nursing therapist course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Dispenser/ Homeopathy

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Diploma in Pharmacy (Homeopathy/ Integrated) படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Data Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Graduation in Computer Application/IT/ Business Administration/ B.Tech C.S or IT/ BCA/ BBA/ Bsc IT/ Graduation with one year diploma/ certificate course in computer science படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Multipurpose Worker (Yoga & Naturopathy)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Attender (Yoga & Naturopathy)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

ULB-UHN (RoTN)

காலியிடங்களின் எண்ணிக்கை: 48

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் ANM படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

Accounts Assistant/ Assistant cum Accounts Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.com / M.Com படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,000

Assistant cum Data Entry Operator/ DEO

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/10/17597463397745.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 18

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Coimbatore Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: