/indian-express-tamil/media/media_files/dGGdLeJWxANonI719eFR.jpg)
தமிழக அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகள் மற்றும் வாரியங்களில் பல்வேறு நிரந்தர மற்றும் தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில் செப்டம்பர் மாதத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி இருக்கும் வேலை வாய்ப்புகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
செப்டம்பர் 4
கடலூர் மாவட்ட சுகாதார துறையில் ஆலோசகர், உதவியாளர் உள்பட 6 பதவிகளில் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க: https://cuddalore.nic.in/notice_category/recruitment/
இதேபோல் ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையில் 5 பதவிகளில் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க: https://erode.nic.in/
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருவேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. திட்ட உதவியாளர் பணியிடங்களில் 9 வேலை வாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பிக்க: https://www.annauniv.edu/
காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறையில் ஐ.டி நிர்வாகி பணியிடம் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க: https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2025/08/17558676914450.pdf
செப்டம்பர் 5
பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 2 அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க: https://perambalur.nic.in/notice_category/recruitment/
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி தகுதியில் திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க: https://www.annauniv.edu/pdf/CMRG_Recruitment_Project_Assistant_Physics.pdf
செப்டம்பர் 7
அரியலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரியலூரில் 21 இடங்களும், ராமநாதபுரத்தில் 29 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட இணையதள பக்கங்களைப் பார்வையிடவும்.
செப்டம்பர் 9
ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க: https://ranipet.nic.in/notice_category/recruitment/
சென்னை உயர்நீதிமன்றத்தில் 41 அசிஸ்டெண்ட் புரோகிராமர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கணினி சார்ந்த படிப்புகளில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க: https://www.mhc.tn.gov.in/recruitment/login
செப்டம்பர் 10
மதுரை மாவட்ட சுகாதார துறையில் ஆலோசகர், உதவியாளர் உள்பட 7 பதவிகளில் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க: https://madurai.nic.in/notice_category/recruitment/
செப்டம்பர் 12
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருவேறு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தரவு பகுப்பாய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: கூடுதல் தகவல்களுக்கு: https://theni.nic.in/notice_category/recruitment/
செப்டம்பர் 15
சென்னை மாநகராட்சி சுகாதார பிரிவில் செவிலியர், ஆய்வக நுட்புனர், உதவியாளர் உள்பட 8 பதவிகளில் 306 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு: https://chennaicorporation.gov.in/gcc/
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 பணியிடங்களும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளன. கூடுதல் தகவல்களுக்கு அந்த பல்கலைக்கழகங்களில் இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.
சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்ட நீதித்துறையில் சமூகப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.
செப்டம்பர் 19
தமிழ்நாடு அரசு அச்சகம் மற்றும் எழுதுபொருள் துறையில் 56 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு: https://www.stationeryprinting.tn.gov.in/
செப்டம்பர் 21
தமிழக காவல்துறையில் 3644 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnusrb.tn.gov.in/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.