/indian-express-tamil/media/media_files/2025/08/15/hosipital-nurse-2025-08-15-12-55-47.jpg)
ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படும் சித்த மருத்துவத் துறையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Yoga & Naturapathy
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: BNYS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
Attender / Multipurpose Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000
Ayurveda Doctor
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MD (Ayurveda) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 60,000
Yoga Professional
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BNYS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 28,000
Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: D.Pharm / Integrated Pharmacy Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2025/09/17587085793376.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், பி பிளாக், 3வது தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், இராணிப்பேட்டை மாவட்டம் - 632403
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.