சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 15 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 15 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 15 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
New Update
hosipital nurse

தஞ்சாவூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஊரக நலவாழ்வு மையங்களில் செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இடைநிலை சுகாதார பணியாளர் (Mid Level Health Provider (MLHP))

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

பல்நோக்கு சுகாதார பணியாளர் (Multi Purpose Health Worker (Male)/ Health Inspector Grade -II)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multipurpose Health Worker (Male) / Inspector / Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 14,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2025/10/17599254333691.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, எல்.ஐ.சி பில்டிங் அருகில், தஞ்சாவூர் - 613001

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Thanjavur Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: