தமிழக அரசு வேலை வாய்ப்பு; 1096 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

தமிழக அரசு வேலை வாய்ப்பு; 1096 ஒருங்கிணைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

தமிழக அரசு வேலை வாய்ப்பு; 1096 ஒருங்கிணைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

author-image
Ambikapathi Karuppaiah
New Update
tn govt jobs

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரகத்தில் டி.என் ரைட்ஸ் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் முதல் உதவியாளர் வரையிலான பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1096 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

Block Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை: 250

கல்வித் தகுதி: Rehabilitation science/ Physiotherapy/ Occupational Therapy/ Speech Therapy/ Special education/ Psychology/ Social work/ Public administration பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 30,000

Rehabilitation and Case Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 94

கல்வித் தகுதி: Master’s degree in any rehabilitation science/master’s degree in Physiotherapy/ Occupational Therapy/ Speech Therapy/ Special education/ psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 35,000

Psychologist/ Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை: 94

கல்வித் தகுதி: Master’s degree in Psychology (Counselling/ Behavioural/ Clinical) படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 35,000

Special Educator

காலியிடங்களின் எண்ணிக்கை: 94

கல்வித் தகுதி: Bachelors / Master’s degree in special education in Intellectual Disability படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 35,000

Occupational Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 94

கல்வித் தகுதி: Bachelor / Master's degree in occupational therapy படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 35,000

Optometrist/ Mobility Instructor

காலியிடங்களின் எண்ணிக்கை: 94

கல்வித் தகுதி: Bachelor / Master’s degree in optometry படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 35,000

Junior Administrative Support

காலியிடங்களின் எண்ணிக்கை: 94

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

Multi-Purpose Worker- Sanitation and Security

காலியிடங்களின் எண்ணிக்கை: 188

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 12,000

Office Helper (SDC)

காலியிடங்களின் எண்ணிக்கை: 94

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tnrightsjobs.tnmhr.com/Landing.aspx என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய https://tnrightsjobs.tnmhr.com/Landing.aspx என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Tamil Nadu Jobs Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: