ஊராட்சி செயலாளர் பதவி: இதையெல்லாம் கரெக்டா பண்ணுங்க; இல்லாட்டி அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆயிடும்!

தமிழ்நாடு அரசின் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை வாய்ப்பு; 1483 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; விண்ணப்பம் செய்வது எப்படி என்ற முழு விபரம் இங்கே

தமிழ்நாடு அரசின் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை வாய்ப்பு; 1483 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; விண்ணப்பம் செய்வது எப்படி என்ற முழு விபரம் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
New Update
tn govt jobs office

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி அலுவலகங்களில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1483 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Advertisment
Advertisements

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு ரூ. 100, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50. விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2025 

இந்தநிலையில் இந்த ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து மக்கள் சேவை என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலில் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று, ஊராட்சி செயலாளர் விண்ணப்பப் பதிவுக்கான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதில் மாவட்டம், இடஒதுக்கீடு வகை, பெயர், முகவரி, கல்வி விபரம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்பட உங்கள் தனிப்பட்ட விபரங்களை நிரப்ப வேண்டும்.

இடஒதுக்கீட்டு வகையில், உங்கள் சாதிப்பிரிவு, தமிழ்வழி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அறிவிப்பில் விபரங்களை சரிபார்த்து, காலியிடங்கள் உள்ள இடங்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்ததற்கான விருப்பத்தை சரியாக நிரப்ப வேண்டும். அடுத்ததாக சாதிச் சான்றிதழ், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

அனைத்து விபரங்களை சரியாக உள்ளிட்டு சமர்ப்பித்தால், உங்கள் கைப்பேசி எண்ணுக்கு ஓ.டி.பி வரும், அதனை உள்ளிட்டு சமர்பிக்க வேண்டும். 

இப்போது நீங்கள் உள்ளிட்ட விபரங்கள் திரையில் காண்பிக்கப்படும். அதனை சரிபார்த்து பணம் செலுத்துதல் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இப்போதே செய்துக் கொள்ள வேண்டும். சமர்பித்த பின்னர் மாற்றம் செய்ய இயலாது.

கட்டணம் செலுத்த டெபிட் கார்டு, இணைய வங்கி சேவையை பயன்படுத்துங்கள். யூ.பி.ஐ சேவையில் சிலருக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை கட்டணம் செலுத்திய நிலையில், அதில் தடங்கல் ஏற்பட்டால் 3 நாட்கள் காத்திருந்து, கட்டண நிலையை பாருங்கள். பின்னர் மீண்டும் கட்டணம் செலுத்துவதற்கான இணைப்பில் சென்று முயற்சி செய்யுங்கள் தடங்கல் ஏற்பட்டு கட்டணம் செலுத்த முடியவில்லை என்றால், புதிய விண்ணப்பத்தை பதிவு செய்யுங்கள். 

Tamil Nadu Jobs Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: