Advertisment

MRB TN Recruitment 2019: தமிழக அரசில் 520 செவிலியர் காலி இடங்கள் - உடனே அப்ளை செய்யுங்கள்

MRB Tamil Nadu Released Notification for Nurse Post: நோயுற்று பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் 520 காலியிடங்கள் இருப்பதாக மருத்துவ சேவை ஆள்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

MRB Tamil Nadu to Recruit 520 Nurses: மருத்துவ சேவை ஆள்சேர்ப்பு வாரியம் (MRB) நோயுற்று பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் 520 காலியிடங்கள் இருப்பதாகவும், தகுதியானவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

இதற்கு MRB-யின் அதிகாரப்பூர்வ தளமான mrb.tn.gov.in என்ற தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 26, 2019.

MRB Tamil Nadu to Hire 520 Nurses, Apply Online @mrb.tn.gov.in : தமிழக அரசின் செவிலியர் பணிக்கு சம்பந்தப்பட்ட முக்கியத் தேதிகள்

அறிவிக்கப்பட்ட நாள் - பிப்ரவரி 06, 2019

ஆன்லைனில் பணம் செலுத்தி, விண்ணப்பிக்கக் கடைசி தேதி - பிப்ரவரி 26, 2019

இந்தியன் வங்கி மூலம் பணம் செலுத்த கடைசி தேதி - பிப்ரவரி 28, 2019

தேர்வு நாள் - ஜூன் 09, 2019

தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் நர்சிங் துறையில், டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதோடு தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில், இதன் அறிவிப்புக்கு முன்னரே உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 57-வரை இருக்க வேண்டும்.

மற்ற விபரங்கள்

எழுத்துத் தேர்வை அடிப்படையாக வைத்து, செலக்‌ஷன் நடைப்பெறும். இதற்கு பொதுப்பிரிவினர் ரூ.700, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.350 கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு mrb.tn.gov.in தளத்தை அணுகவும்.

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment