TN MBBS Admission: தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங் ரவுண்ட் 2; தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட் ஆஃப் இதுதான்!

TN MBBS Admission: தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு 3 ஆம் சுற்று விரைவில் தொடக்கம்; தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டாம் சுற்றின் கட் ஆஃப் இதுதான்!

TN MBBS Admission: தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு 3 ஆம் சுற்று விரைவில் தொடக்கம்; தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டாம் சுற்றின் கட் ஆஃப் இதுதான்!

author-image
Ambikapathi Karuppaiah
New Update
mbbs students

தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் மூன்றாம் சுற்று தொடங்க நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டாம் சுற்றின் கட் ஆஃப் என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து மூன்றாம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது.

இந்தநிலையில், 22 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டாம் சுற்றின் கட் ஆஃப் என்ன என்பது குறித்து பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் கூறியுள்ளார். 

தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரவுண்ட் 2 கட் ஆஃப்

1). திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி – 503

2). கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு – 502

3). பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் நிறுவனம், கோவை – 519

4). ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ அறிவியல் நிறுவனம், கன்னியாகுமரி – 504

5). தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூர் – 498

6). கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை – 502

7). கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் – 618

8). தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை – 494

9). வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – 497 (பி.சி)

Advertisment
Advertisements

10). மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – 498

11). ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி, சென்னை – 495

12). மாதா மருத்துவக் கல்லூரி, சென்னை – 484 (பி.சி)

13). அன்னப்பூர்ணா மருத்துவக் கல்லூரி, சேலம் – 478 (பி.சி)

14). கே.எம்.சி.ஹெச் மருத்துவ அறிவியல் நிறுவனம், கோவை – 506

15). பனிமலர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை – 500

16). இந்திரா மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் – 477 (பி.சி)

17). சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்செங்கோடு – 497

18). அருணை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை – 488 (பி.சி)

19). செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணகிரி – 495

20). நந்தா மருத்துவக் கல்லூரி, ஈரோடு – 483 (பி.சி)

21). பி.எஸ்.பி மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் – 476 (பி.சி)

22). அன்னை மருத்துவக் கல்லூரி, சென்னை – 476 (பி.சி)

அனைத்துக் கல்லூரிகளின் இடஒதுக்கீட்டு பிரிவு வாரியான கட் ஆஃப் விபரம் கீழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Mbbs Counselling

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: