/indian-express-tamil/media/media_files/2025/06/19/mrb-2025-06-19-15-44-32.jpg)
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1429 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 16.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade-II)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1429
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multipurpose Health Worker (Male) / Health Inspector/ Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500 – 71,900
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு பொதுப் பிரிவு, எஸ்.சி (SC), எஸ்.சி.ஏ (SC(A)), எஸ்.டி (ST), எம்.பி.சி (MBC & DNC), பி.சி (BC), பி.சி.எம் (BCM) உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இந்தத் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் 40% மதிப்பெண்கள் பெற்றால் தான் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படும்.
இரண்டாம் பகுதியில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்தத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.11.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us