scorecardresearch

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் தேதி மாற்றம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 2-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News
Tamil News Updates

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்காக கவுன்சிலிங் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 வகுப்புகளுக்காக பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்டப்படிப்புக்காக விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்ட நிலையில், பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டது. இதில் பொறியியல் படிப்புக்கு அதிகப்படியான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 2-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு பிரிவினருக்கான (விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர் மற்றும் டி.ஏ) கவுன்சிலிங் ஜூலை 2ம் தேதி தொடங்கி ஜூலை 6ம் தேதி வரை நடைபெறும். பொதுப்பிரிவினருக்கு ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நடைபெறும்.

பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு மே 22 வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை சேர்க்கைக்கு இதுவரை 2,58,627 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் மாணவர்கள் மே 22 (திங்கட்கிழமை) வரை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுகப்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணத்தை ரூ.600ல் இருந்து ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு (2023-2024) சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu engineering counselling date change minister ponmudi update