/indian-express-tamil/media/media_files/v23laWkv66TDS6RJ4C8K.jpg)
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 1996 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 809 மையங்களில் 14 பாடங்களுக்கு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 2,20,412 பேர் எழுதினர்.
இந்த தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்தது. பாட வாரியான தாள்களில் சில பாடங்கள் எளிதாகவும், சில பாடங்கள் சற்று கடினமாகவும் இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய தேர்வர்கள் கீழ்கண்ட படிநிலைகளை பின்பற்றலாம்.
1). முதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://trb.tn.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
2). முகப்பு பக்கத்தில் சமீபத்திய செய்திகளில் “15-10-2025 – Direct Recruitment for PG Assistant / Physical Director Grade – I / Computer Instructor Grade – I (02/2025) - Release of Tentative key with Objection Tracker” என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
3). இப்போது புதிதாக தோன்றும் பக்கத்தில் Click here to access the link for Tentative Answer Key and Objection Tracker என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
4). புதிதாக தோன்றும் பக்கத்தில் உள்நுழைவு பதிவு எண் மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழைய வேண்டும்.
5). இப்போது Objection Tracker என்பதை கிளிக் செய்து, கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை படித்து சமர்பிக்க வேண்டும்.
6). அடுத்தாக ஒவ்வொரு வினா எண்ணாக தேர்வு செய்து, விடைக்குறிப்பை சரிப்பார்த்துக் கொள்ளலாம்.
7). விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், தேவையான ஆவணங்கள் மூலம் ஆட்சேபனைகளை பதிவு செய்யலாம்.
ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதிக்குள் உரிய ஆட்சேபனையினை தெரிவிக்க வேண்டும் என டி.ஆர்.பி தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.