/indian-express-tamil/media/media_files/2025/10/14/tnpsc-2025-10-14-12-54-47.jpg)
டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடியே, 152 முதல் 160 கேள்விகளுக்குள் சரியாக பதிலளித்தவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
மொத்தம் உள்ள 4662 பணியிடங்களில் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர் , சுருக்கெழுத்துத் தட்டச்சர், வனக் காவலர், வனப் பார்வையாளர், கள உதவியாளர், இளநிலை செயல் அலுவலர், மற்றும் வருவாய் ஆய்வாளர் போன்ற பல பதவிகளுக்கு 152 முதல் 160 கேள்விகளுக்குள் பதிலளித்தவர்களே பணிக்குச் செல்ல வாய்ப்பு உள்ளதாக ஜாப்ஸ் பாயிண்ட் ஹியர் என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுளள் ஒரு வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருப் 4 தேர்வில் மொததம் 220 வி.ஏ.ஓ பணியிடங்களில் பொதுப் போட்டி (OC) 68, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) 58, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) (BCM) 8, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) 44, ஆதி திராவிடர் (SC) 33, ஆதி திராவிடர் (அருந்ததியர்) (SCA) 7, பழங்குடியினர் (ST) 2, என்று இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல் பெண்களுக்கு அனைத்துப் பிரிவுகளிலும் 30 சதவீதம், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 300-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் தாய்/தந்தையை இழந்தவர்களுக்கு சமூக அடிப்படையிலும் (Community Wise) பொதுப் பிரிவிலும் (General) பல முன்னுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களைத் தாண்டி, சில கூடுதல் முன்னுரிமைகளும் இருக்கலாம். சமூக வாரியான காலிப் பணியிடப் பிரிவுகளில், இந்த முறையும், 160+ கேள்விகள் சரியான பதில்களாகக் கொண்டவர்கள் இருந்தாலும், 159, 158 மற்றும் சில சமூகங்களில் 157, 156 வரை சரியாகப் பதிலளித்தவர்களுக்கும் வி.ஏ.ஓ ஆவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
2024 மற்றும் 2023 ஆம் ஆண்டு முடிவுகளுடன் ஒப்பிடுகையில், இந்த முறை கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடும்போது, அனைத்துப் பிரிவினருக்குமான கட்-ஆஃப் 10 முதல் 12 மதிப்பெண்கள் வரை குறைந்திருக்கிறது. வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சனர், ஆர்,ஐ உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் கட்-ஆஃப் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதியாகக் குறைந்துள்ளதால் இந்த கட்-ஆஃப் நிலவரம் உள்ளது. சென்ற முறை போல 9000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருந்திருந்தால், 145+ கேள்விகளுக்கு சரியாகப் பதிலளித்தவர்களுக்கும்கூட வேலை கிடைத்திருக்க வாய்ப்பு உருவாயிருக்கும். தற்போதைய நிலையில் 4662 பணியிடங்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில், குறிப்பாக கவுன்சிலிங்கிற்கு முன்னர், காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் இந்த மாதிரியான முன்னுரிமைகள் மற்றும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது என்று கூறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us