/indian-express-tamil/media/media_files/2025/10/19/namakkal-vet-college-jobs-2025-10-19-16-47-20.jpg)
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தில் இளம் வல்லுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Young Professional - I
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Sc Agriculture படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 30,000
Young Professional - II
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.Sc Agriculture படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 42,000
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1760433872.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Professor and Head, Krishi Vigyan Kendra, Veterinary College and Research Institute Campus, Namakkal – 637 002, Tamil Nadu.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 23.10.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.