Teacher Recruitment Board (TRB) Tamil News: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (டிஆர்பி) பிப்ரவரியில் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) தாள்-II-ல் தேர்வெழுதிய 2.54 லட்சம் பேரில் (6%) வெறும் 15,406 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் 150-க்கு 82 மதிப்பெண்களைப் பெற முடியாமல் இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர். அதற்கு வினாத்தாளில் உள்ள பிழைகள் மற்றும் தவறான முடிவுகளுமே காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.
மார்ச் 28 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், வினாத்தாள் தொடர்பாக 3,341 விண்ணப்பதாரர்களிடமிருந்து 16,409 ஆட்சேபனைகளை வாரியம் பெற்றுள்ளது. 20க்கும் மேற்பட்ட கேள்விகளில் பிழைகள் இருப்பதாகவும், வாரியம் ஒரு சில கேள்விகளுக்கு மதிப்பெண்களை வழங்கியதாகவும், அதன் விடைகளின் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் எதிர்த்த கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கியதாகவும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
“சமூக அறிவியல் பிரிவில், இந்தியாவில் எந்த மாநிலத்தில் ரயில்வே நெட்வொர்க் இல்லை என்று கேள்வி எண் 150 ஆக கேட்கப்பட்டது. கொடுக்கப்பட்ட நான்கு விருப்பங்களில் அஸ்ஸாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம். வாரியத்தின் விடைப்படி அது மேகாலயா. ஆனால், சரியான பதில் சிக்கிம்தான்." என்று ஒரு ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
“தேர்வில் 6.06% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தாள் -I போலவே, தாள் II-ல் பல பிழைகள் இருந்தன." என்று மற்றொரு ஆர்வலர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil