தமிழ்நாட்டில் 570-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 520-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆறு அரசுக் கல்லூரிகளும், மூன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 511 தன்நிதி கல்லூரிகளும் 4 பல்கலைப் பிரிவுகளும் உள்ளன.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் பள்ளிப்படிப்பை முடித்து என்ஜினீயரிங் கல்லூரிக்கு வருகிறார்கள்.
இவர்கள் பயன்பெறும் வகையில், அண்ணா பல்கலைக்கழகம், மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேலும், கல்லூரியின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு பகிரப்பட்டுவருகிறது. இந்த நிலையில், சில முழு நேர ஊழியர்கள் எம்.டெக் மற்றும் என்ஜினீயரிங் படிப்பதாக பல்கலைக்கழகத்துக்கு புகார்கள் வந்தன.
கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மற்ற மாநில எல்லைகளில் இவ்வாறு மாணவர்கள் இணைவதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில், 'M.E. உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் முழுநேர ஊழியர்களை சேர்த்து வருகைப் பதிவை போலியாக மேற்கொள்வதாக பொறியியல் கல்லூரிகள் மீது புகார்கள் வந்துள்ளன.
விசாரணை நடத்தி கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“