திருவண்ணாமலை வேளாண் அறிவியல் மைய வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

திருவண்ணாமலையில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஸ்டெனோ, உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலையில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஸ்டெனோ, உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
Ambikapathi Karuppaiah
New Update
tiruvannamalai kvk

திருவண்ணாமலையில் உள்ள மத்திய அரசின் வேளாண் அறிவியல் மையத்தில் விஞ்ஞானி, ஸ்டெனோகிராபர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2025

Advertisment

மூத்த விஞ்ஞானி (Senior Scientist and Head)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Doctoral degree in Agriculture படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: நிலை - 13

ஸ்டெனோகிராபர் (Stenographer)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: நிலை - 4

உதவியாளர் (Supporting Staff)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: நிலை – 1

வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://kvkthiruvannamalai.com/NOTI012025TNBRD-Staff%20Recruitment.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Kilnelli village, Chithathur Post, Vembakkam Taluk, Thiruvannamalai District – 604 410, Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.10.2025

விண்ணப்பக் கட்டணம்: விஞ்ஞானி பணியிடங்களுக்கு ரூ. 1000, ஸ்டெனோகிராபர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ. 300. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Tiruvannamalai Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: