10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் பேரும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 80 ஆயிரம் பேரும் எழுதியிருந்தனர்.
இதில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின.
இந்நிலையில், 10 மற்றும் 11-ஆம் வகுப்புக்கான முடிவுகள் இன்று (மே 19) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கும், 11 ஆம் வகுப்பு முடிவுகள் பகல் 2 மணிக்கும் வெளியாகின்றன.
http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது . பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து கல்வி தொடர ஏற்பாடு செய்வோம் . மதிப்பெண் விவகாரத்தில் மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் தரக் கூடாது . வடமாவட்டங்களின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவர்கள் தோல்வி.
தமிழகத்தில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து . அனைவருக்கும் எதிர்காலம் சிறந்து புதிய உச்சங்களை தொட எனது வாழ்த்துக்கள் – இ.பி.எஸ்
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்து – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ் – 95.55% , ஆங்கிலம் – 98.93% , கணிதம் – 95.54% , அறிவியல் – 95.75% , சமூக அறிவியல் – 95.83%
ஆங்கிலம் – 89 , கணிதம் – 3,649 , அறிவியல் – 3,584 ,சமூக அறிவியல் – 320
10 வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சியடையாத மாணவர்கள் மே 23ம் தேதி முதல் 27 வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு பள்ளிகள் – 87.45% . அரசு உதவிப்பெறும் பள்ளிகள் – 92.24% . தனியார் பள்ளிகளில் 97.38 % தேர்ச்சி
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.67 % தேர்ச்சி பெற்று, பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி – டாப் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்: பெரம்பலூர் – 97.67% , சிவகங்கை – 97.53% ,. விருதுநகர் – 96.22% கன்னியாகுமரி – 95.99% , தூத்துக்குடி – 95.58%
தேர்ச்சி விகிதம்: 91.89 %, மாணவர்கள் 88.% , மாணவிகள்; 94.66%
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழக மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
சற்று நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. முடிவுகள் வெளியானதும், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மதிப்பெண் விவரங்கள் பதிவேற்றப்படும்.
2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில், தேர்வு எழுதிய 10 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைவார்கள் என்று கூறப்பட்டது. குறிப்பாக கொரோனா பரவல் காரணத்தால் 2 ஆண்டுகள் தேர்வு நடைபெறவில்லை. 2020 ம் ஆண்டு, அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வு முடிவுகளை வைத்து மதிப்பெண் வழங்கப்பட்டது.
10 வகுப்பில் முதல் மார்க் எடுத்த மாணவர்கள் குறித்து எந்த அறிவிப்பும் 2018ம் ஆண்டு முதல் வெளியிடப்படுவதில்லை. எந்த மாவட்டங்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகும்.
http://www.dge.tn.gov.in/result.html , http://www.tnresults.nic.in , dge1.tn.nic.in தேர்வு முடிவுகளை பார்க்க இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.
12 வகுப்பு தேர்வில் விருதுநகர், தேர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் 10 வகுப்பு தேர்வில் எந்த மாவட்டம் முதல் இடத்தில் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு 10 வகுப்பு தேர்வில் 90.07 % பேர் தேர்ச்சி பெற்றனர். 9 லட்ச மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் ஆண்களை விட பெண்கள் 94.4 % பேர் தேர்ச்சி பெற்றனர்.
http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இன்று காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகும். மேலும் எஸ்.எம்.எஸ் மூலம் முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.