அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யும் பிரச்சனையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ) எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இதுதொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் நவம்பர் 20 வரை நீதிமன்றம் அவகாசம் கொடுத்தது.
Advertisment
மாநில அரசு பிறப்பித்த உத்தரவு, ஏஐசிடிஇ-இன் வழிகாட்டுதல்களை மீறுவதாக உள்ளது என்ற கருத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தியன் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க ஏ.ஐ.சி.டி.இ, யுஜிசிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.
Advertisment
Advertisements
தமிழகத்தில், அரியர் தேர்வு எழுத, கட்டணம் செலுத்திய, அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருப்பது, ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி- இன் விதிமுறைகளுக்கு முரணனாது என்று ஏஐசிடிஇ சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், அதிக எண்ணிக்கையில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது. இது தொழிற்துறைக்கும் ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்தது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகளை முதல்வர் பழனிசாமி முன்னதாக ரத்து செய்தார். மேலும், அரியர்ஸ் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
பாலகுருசாமி தனது மனுவில், "மாணவர்களுடைய கல்வித்தரம், பணிவாய்ப்புகள் மற்றும் எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானது. எந்தவொரு கல்வி அமைப்பிலும் மாணவர்கள் கற்றுக் கொண்டதை மதிப்பீடு செய்வது என்பது மிக மிக முக்கியமான மைல் கல்லாகும். தேர்வில் வெற்றி பெறுவது என்பது மாணவர்களுக்கு நம்பிக்கையையும் திருப்தியையும் அளிக்கிறது. சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்வதற்குத் தேவையான தகுதிறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை தேர்வு முடிவுகள் தான் தருகின்றன' என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil